யுகங்கள் நான்கு:
1. கிருத யுகம்
2. திரேதாயுகம்
3. துவாபரயுகம்
4. கலியுகம்
யுகங்களின் கால வரையறை:
கிருதயுகம் வரு- 1728000
திரேதாயுகம் வரு- 1296000
துவாபரயுகம் வரு- 864000
கலியுகம் வரு- 432000
சப்த வருஷங்கள்:
1. பாரத வருஷம்
2. கிம்புருஷ வருஷம்
3. அரி வருஷம்
4. குரு வருஷம்
5. இலவிருத வருஷம்
6. ரம்மிய வருஷம்
7. ஐரண்வத வருஷம்
நாம் வசிப்பது பாரத வருஷமாகு. மற்றுமுள்ள வருஷங்களின் தேசங்களைச் சோதிடப் பெருநூர்களிலாவது பாக்கெட் ஜோதிடத்திலாவது பார்க்க விளங்கும்.
மற்றுமுள்ள அப்தங்ககளும் நவகண்டங்களும் இங்கு அவசியமில்லை ஆதலால் அவை இங்கு சொல்லப்படவில்லை.
வருஷங்கள் 60
வருஷம் என்பது அயனமேன்னும் பாகத்தையும், ருதுக்கலேன்னும் காலத்தையும், மாதங்களையும் தன்னுள் அடக்கி 365 நாள் கொண்டு சில சமயங்களில் அதிக மாதங்களையும் கொண்டுள்ளது. மானிடர்களுக்குக் காலக்கணக்கை காட்டக் கூடியது; பிரபஞ்சத்திற்கும் பிரஜைகளுக்கும் காலத்தால் ஆனந்தத்தை ஊட்டக்கூடியது. இது தேவர்களுக்கு ஒரு நாள்.
வருஷ பஞ்சகம்:
1. வருஷம்
2. அயனம்
3. ருது
4. மாதம்
5. பக்ஷம் -ஆகிய இவ்வைந்துமே வருஷ பஞ்சகம் எனப்படும்.
அவை கீழ் வருமாறு காண்க:
1.பிரபவ 2.விப 3.சிக்கில 4.பிரமோதூத 5.பிரஜோற்பத்தி 6.ஆங்கிரச 7.ஸ்ரீ முக 8.பவ 9.யுவ 10.தாது 11.ஈசுவர 12.வெகதான்ய 13.பிரமாதி 14.விக்கிரம 15.விஷூ 16.சித்திரபானு 17.சுபானு 18.தாரண 19.பார்த்திவ 20.விய 21.சர்வசித்து 22.சர்வதாரி 23.விரோதி 24.விகிருதி 25.கர 26.நந்தன 27.விஜய 28.ஜய 29.மன்மத 30.துன்முகி 31.ஹேவிளம்பி 32.விளம்பி 33.விகாரி 34.சார்வரி 35.பிலவ 36.சுபக்ருது 37.சோபக்ருது 38.குரோதி 39.விசுவாவசு 40.பிராபவ 41.பிலவங்க 42.கீழாக 43.சௌமிய 44.சாதாரண 45.விரோதிக்ருது 46.பரிதாபி 47.பிரமாதீச 48.ஆனந்த 49.ஆனந்த 50.நல 51.பிங்கள 52.காலயுத்தி 53.சித்தார்த்தி 54.ரௌத்திரி 55.துன்பதி 56.துந்துபி 57.ருத்ரோத்காரி 58.ரக்தாஷி 59.கொரோதன 60.அக்ஷய.
அயனங்கள் இரண்டு:
1. உத்திராயணம்
2. தக்ஷணாயணம்
அயனம் என்றால் கமனம். (அதாவது செல்வது என்று பொருள்)
கிழக்கு பாகத்தை இரண்டாக - அதில் வடபாகம் பதியும் தென்பாகம் பாதியுமாகிறது. சூரியன் வடபாகத்தில் தை மாதம் முதல் தேதி முதல் ஆணி மாதம் 30-ம் தேதி வரையில் செல்வதுதான் உத்தராயணம், தென்பாகத்தில் ஆடி மாதம் 1-ஆம் தேதி முதல் மார்கழி மாதம் 30-ஆம் தேதி வரையில் செல்வதுதான் தக்ஷணாயணம்.
உத்தராயணமான வடபாகம் தேவர்களுக்கு இருப்பிடமாம், இக்காலத்தை தேவர்களுக்கு பகற்காலமென்று சொல்வார்கள். ஆதலால் இக்காலம் மானிடர்களுக்கு சுப காரியங்கள் செய்ய உத்தமமான காலமாகும். தக்ஷ்ணாயனமான தென்பாகமானது இராக்ஷதரும் பிதிர்தேவதைகளும் வாசஞ்செய்யும் இடமாம். இதை இராத்திரி காலமென்றே சொல்வார்கள். ஆதலால் மானிடர்களுக்கு இது மத்திமமான காலமாகும்.

Post a Comment